அசாத் சாலி கைது

அசாத் சாலி கைது

அசாத் சாலி கைது

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2021 | 6:56 pm

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சற்று நேரத்திற்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி வௌியிட்டதாகக் கூறப்படும் கருத்து ஊடாக தண்டனை சட்டக்கோவை, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் இன்று பிற்பகல் அறிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்