அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

by Chandrasekaram Chandravadani 15-03-2021 | 4:03 PM
Colombo (News 1st) பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்ரேலியாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மைக் காலத்தில் முன்வைக்கப்படும் பாலியல் சார் தாக்குதல் குற்றச்சாட்டுக்களால் ஏற்பட்ட அதிர்வலைகளை அடுத்து இந்தப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவ்வாறான குற்றச்சாட்டுகள், அவுஸ்ரேலியாவின் ஆளும் கன்சவேட்டிவ் அரசாங்கத்தின் மீது நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அவுஸ்ரேலிய சட்ட மா அதிபர் கிறிஸ்டியன் போட்டெருக்கு (Christian Porter) எதிராக, பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து, கடந்த வாரமே இந்தப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனைத்தவிர, அமைச்சு அலுவலகமொன்றில் வைத்து தாம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னாள் அரசியல் ஆய்வாளர் Brittany Higgins குற்றஞ்சுமத்தியதை அடுத்து, நாடளாவிய ரீதியில் பாரிய கோப அலைகள் ஏற்பட்டுள்ளன.