காடழிப்பில் ஈடுபடுவோருக்கு எதிராக சுற்றிவளைப்பு

காடழிப்பில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் 

by Staff Writer 14-03-2021 | 7:55 PM
Colombo (News 1st) சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சுற்றிவளைப்புகளை கடுமையாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காடழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் நோக்கில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கும் தகவல்களை வழங்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் 1997 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி, தகவல்களை வழங்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு தகவல்களை வழங்குவோருக்கு உரிய சன்மானம் வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.