வாகன இறக்குமதியாளர்களுக்கு ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்த திட்டம்

வாகன இறக்குமதியாளர்களுக்கு ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்த திட்டம்

வாகன இறக்குமதியாளர்களுக்கு ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்த திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2021 | 4:08 pm

Colombo (News 1st) வாகன இறக்குமதியாளர்களுக்கு ஒதுக்கீடு முறையை (Quota) அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து வாகன இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எஸ்.ஆர் ஆட்டிகல குறிப்பிட்டார்.

1500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆகவே, கோட்டா முறையினூடாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்குரிய விலைமனுக்களை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பிரத்தியேக பயன்பாட்டிற்குரிய வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்