மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2021 | 3:27 pm

Colombo (News 1st) மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாகாண சபை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் மற்றும் அதில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

தொகுதிமுறை, எல்லை நிர்ணயம் , ஐம்பதிற்கு ஐம்பது, மகளிர் பங்கேற்பு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் அவர்களாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகள் நடத்தப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகள் குறித்து மக்களை அறிவுறுத்தி, மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண பிரதிநிதிகளுடன் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

தேசியம், இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்துவதற்காக, கடந்த 15 மாதங்கள் தாம் பணியாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்