இலங்கை தேசியக் கொடியின் படத்துடன் கால்மிதிகள்: விளம்பரத்தை அகற்றியது அமேசான்

இலங்கை தேசியக் கொடியின் படத்துடன் கால்மிதிகள்: விளம்பரத்தை அகற்றியது அமேசான்

இலங்கை தேசியக் கொடியின் படத்துடன் கால்மிதிகள்: விளம்பரத்தை அகற்றியது அமேசான்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2021 | 5:15 pm

Colombo (News 1st) இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை தேசியக் கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால்மிதிகள் தொடர்பான விளம்பரத்தை அகற்றுவதற்கு அமசோன் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட கால்மிதிகளில் இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை பயன்படுத்தியமை தொடர்பில் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விடயம் தொடர்பிலான தகவல்களை சீன வௌிவிவகார அமைச்சிற்கு வழங்கி, இலங்கையின் தேசியக் கொடியை தவறாக பயன்படுத்தி கால் மிதிகள் மற்றும் இதர பொருட்கள் தயாரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தேசியக் கொடியை பயன்படுத்தி கால்மிதிகள் தயாரிப்பதையும், அதுபோன்ற எவ்வித பொருட்களை விற்பனை செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறும் அமசோனில் இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்திய நிறுவனத்திற்கு தூதரகத்தினால் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து குறித்த விளம்பரம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், இலங்கையின் தேசியக் கொடியுடன் கூடிய எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்கு சீனாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரம் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்