IMF விடுத்துள்ள அறிக்கை ஆச்சரியமளிக்கிறது

சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஆச்சரியமளிக்கிறது: அஜித் நிவாட் கப்ரால்

by Staff Writer 12-03-2021 | 8:22 PM
Colombo (News 1st) இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பரிவர்த்தனை வசதி எனப்படும் Swap வசதியை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் (IMF) விடுத்துள்ள அறிக்கை குறித்து இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளார். கடந்த வருடத்தின் முதலாவது அரையாண்டில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கை அரசாங்கம் கொரோனாவுக்காக உதவி கோரியிருந்த போது, அதனை வழங்குவதனை சர்வதேச நாணய நிதியம் தாமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி இலங்கை அரசாங்கம் குறித்த நிவாரணத்தையும், உதவிகளையும் நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததாகவும் முழுமையான பொருளாதார அடிப்படையை முன்னெடுத்ததாகவும் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.