by Staff Writer 12-03-2021 | 8:33 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் வட மாகாணத்திற்கான விஜயத்தின் ஒரு கட்டமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.
இந்திய அரசின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டார்.
அத்துடன், யாழ். பொது நூலகத்திற்கு சென்ற அவர் திருவள்ளுவர் சிலை, அப்துல் கலாமின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன், நூலகத்தையும் பார்வையிட்டார்
பின்னர் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடினார்.