மீண்டும் முழு முடக்கத்திற்கு செல்கிறது நாக்பூர்

மீண்டும் முழு முடக்கத்திற்கு செல்கிறது நாக்பூர்

மீண்டும் முழு முடக்கத்திற்கு செல்கிறது நாக்பூர்

எழுத்தாளர் Bella Dalima

12 Mar, 2021 | 5:10 pm

Colombo (News 1st) இந்தியா – மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டம் மீண்டும் முழுமையாக முடக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக மீண்டும் முழுமையாக முடக்கப்படவுள்ள முதலாவது பாரிய நகரம் இதுவாகும்.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாக்பூர் முழு முடக்கத்திற்கு செல்கிறது.

நாக்பூரில் கடந்த 2 வாரங்களாக நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுடன் அடையாளங் காணப்படுவதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் எதிர்வரும் 2 நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 1,57,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சடுதியாக தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரை 20 மில்லியன் பேர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்