கொஹூவலயில் காரினுள் எரிந்த நிலையில் சடலம்: மரபணு சோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன

கொஹூவலயில் காரினுள் எரிந்த நிலையில் சடலம்: மரபணு சோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன

கொஹூவலயில் காரினுள் எரிந்த நிலையில் சடலம்: மரபணு சோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2021 | 5:32 pm

Colombo (News 1st) கொழும்பு – கொஹூவல பகுதியில் காரொன்றில் இருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறுதி செய்வதற்கான மரபணு சோதனையை முன்னெடுக்க தேவையான மாதிரிகள் இன்று பெற்றுக்கொள்ளப்பட்டன.

மீட்கப்பட்ட சடலம் மற்றும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் வர்த்தகரின் தாய், தந்தையின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

PCR சோதனைக்கு தேவையான மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பெறப்பட்ட மாதிரிகளினூடாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததன் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் 9 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

களுபோவில ஆசிரி மாவத்தை பகுதியில் தனியார் ஒழுங்கை ஒன்றில் காரொன்றிலிருந்து நேற்று முந்தினம் (10) இரவு 11 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

காரும் தீக்கிரையாகியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்