கொழும்பு விளக்கமறியல் சிறையில் கையடக்க தொலைபேசிகள்

கொழும்பு விளக்கமறியல் சிறையிலிருந்து கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றல்

by Staff Writer 12-03-2021 | 3:32 PM
Colombo (News 1st) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 05 கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 11 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசிக்கான 04 மின்கலங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அத்தியட்சகரின் கோரிக்கைக்கு அமைய இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.