ஏப்ரல் 21 தாக்குதல்: இறுதி அறிக்கையின் மேலும் 22 பகுதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: இறுதி அறிக்கையின் மேலும் 22 பகுதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: இறுதி அறிக்கையின் மேலும் 22 பகுதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2021 | 4:50 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின், மேலும் 22 பகுதிகள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீரவினால் அறிக்கையின் பாகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பாகங்கள் கடந்த 2 ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 87 பாகங்களைக் கொண்டதாகும்.

அவற்றில் இன்று கையளிக்கப்பட்ட 22 பாகங்களும் ஆணைக்குழு முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அதிக உணர்வுபூர்வமானவை என சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்