ரஞ்சன் ராமநாயக்க பார்வையாளர்களை சந்திக்க  தடை

ரஞ்சன் ராமநாயக்க பார்வையாளர்களை சந்திக்க இரண்டு வாரங்களுக்கு தடை

by Bella Dalima 11-03-2021 | 4:08 PM
Colombo (News 1st) சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்களை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பார்வையிட வந்தவருடன் Selfie எடுத்துக்கொண்டமைக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது, Selfie எடுத்துக்கொண்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.