கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 11-03-2021 | 11:53 AM
Colombo (News 1st) இன்று (11) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 342 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. அவர்களில் 42 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். ஏனைய 300 பேரில் அதிகளவான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 62 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 34 பேரும் கண்டி மாவட்டத்தில் நால்வரும் அம்பாறை மாவட்டத்தில் 07 நபர்களும் பதுளை மாவட்டத்தில் நால்வரும் மன்னார் மாவட்டத்தில் 18 பேரும் யாழ். மாவட்டத்தில் 39 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 06 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐவரும் வவுனியா மாவட்டத்தில் 13 நபர்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டை பிரதேசத்தில் 10 பேருக்கும் பொரளையில் இருவருக்கும் முல்லேரியா பகுதியில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பஹா - மினுவாங்கொடை பகுதியில் 16 பேருக்கும் நீர்கொழும்பில் மூவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. பலாலி பிரதேசத்தில் 11 பேர், ஊர்காவற்றுறை பகுதியில் ஐவர், காங்கேசன்துறை பிரதேசத்தில் மூவர், சுன்னாகம் பகுதியில் இருவர் உட்பட் யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புத்தளம் - சிலாபம் பகுதியில் மூவருக்கும் கற்பிட்டி பகுதியில் இருவருக்கும் ஆனமடுவ பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் இன்று (11) காலை வரையில் மொத்தமாக 86,685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று (11) காலை வரை 83,210 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் 4 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. கொழும்பு - 14, கொழும்பு - 09, அலவத்துகொடட மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளை சேர்ந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது.