ஹரி – மேகன் குழந்தைக்கு இளவரசர் பட்டம் வழங்கப்படாதது ஏன்: பக்கிங்காம் அரண்மனை விளக்கம்

ஹரி – மேகன் குழந்தைக்கு இளவரசர் பட்டம் வழங்கப்படாதது ஏன்: பக்கிங்காம் அரண்மனை விளக்கம்

ஹரி – மேகன் குழந்தைக்கு இளவரசர் பட்டம் வழங்கப்படாதது ஏன்: பக்கிங்காம் அரண்மனை விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2021 | 3:28 pm

Colombo (News 1st) இனவெறி காரணமாகத்தான் ஹரி-மேகன் தம்பதியின் குழந்தைக்கு இளவரசர் பட்டம் வழங்கப்படவில்லையா எனும் கேள்விக்கு பக்கிங்காம் அரண்மனை பதில் அளித்துள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி – மேகன் தம்பதியினர் தாமாக விலகிக்கொள்வதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.

பின்னர் சமீபத்தில் அவர்கள் இருவரும் இணைந்து வழங்கிய பேட்டியில், தாம் கறுப்பினப் பெண் என்பதால், தனது குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக மேகன் கூறியிருந்தார்.

இந்த இனவெறி காரணமாக, மனம் உடைந்ததாகவும் தற்கொலை எண்ணம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், தனது குழந்தைக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டதாக மேகன் கூறியது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது, பாரம்பரியமான இங்கிலாந்து அரச பரம்பரைக்கு களங்கம் ஏற்படுத்திய நிலையில், ஹரி-மேகன் குற்றச்சாட்டுகள் குறித்து இங்கிலாந்து அரண்மனை விளக்கம் அளித்துள்ளது.

ஹரி-மேகன் தம்பதியின் குழந்தைக்கு ஏன் இளவசர் பட்டம் தரப்படவில்லை என்பதற்கு பக்கிங்காம் அரண்மனை பின்வருமாறு விளக்கமளித்துள்ளது;

இளவரசர் பிரின்ஸ் வில்லியம்ஸின் 3 குழந்தைகள் மட்டுமே இளவரசர், இளவரசிகளாக உள்ளனர். மன்னர் 5 ஆம் ஜோர்ஜ் 1917-இல் விதிமுறை ஒன்றை வகுத்தார். அதாவது, மன்னரின் குழந்தைகளுக்கும் மன்னர் மகனின் குழந்தைக்கும் வேல்ஸ் இளவரசரின் மூத்த மகனின் மூத்த மகனுக்கும் மட்டுமே இளவரசர் பட்டம் வழங்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை திருத்தம் செய்யும் அதிகாரம் ராணிக்கு வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி 2012-இல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, இளவரசர் வில்லியம்ஸின் 3 குழந்தைகளும் இளவரசர், இளவரசிகளாக பட்டம் சூட்டப்பட்டனர். இல்லாவிட்டால், இளவரசரின் மூத்த மகன் ஜோர்ஜ் மட்டுமே இளவரசராக பட்டம் சூட்டப்பட்டிருப்பார். அந்த வகையில், ஹரி-மேகன் தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு அரச வம்சப்படி மவுண்ட்பேட்டன்-விண்ட்சர் பட்டமே சூட்டப்படும். ஆனால், அப்பட்டதை ஹரி-மேகன் வேண்டாமென தவிர்த்தனர். எனவே, எந்த இனவெறிக்காகவும் குழந்தைக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்படவில்லை

என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்