சர்வசே ஒலிம்பிக் குழுவின் தலைவராக தோமஸ் பக் மீண்டும் தெரிவு

சர்வசே ஒலிம்பிக் குழுவின் தலைவராக தோமஸ் பக் மீண்டும் தெரிவு

சர்வசே ஒலிம்பிக் குழுவின் தலைவராக தோமஸ் பக் மீண்டும் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2021 | 3:55 pm

Colombo (News 1st) சர்வசே ஒலிம்பிக் குழுவின் (International Olympic Committee – IOC)  தலைவராக ஜெர்மனியை சேர்ந்த சட்டத்தரணியான தோமஸ் பக் (Thomas Bach) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

67 வயதான அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஒன்லைன் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள தோமஸ் பக், கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பிக்கும் என உறுதிபடக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்