கொஹூவலயில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளம் காண DNA பரிசோதனை

கொஹூவலயில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளம் காண DNA பரிசோதனை

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2021 | 7:04 pm

Colombo (News 1st) கொழும்பு – கொஹூவலயில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளங்காண்பதற்காக DNA பரிசோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 06 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொஹூவல – ஆசிரி மாவத்தை பகுதியில் தீ விபத்திற்குள்ளாகிய காரொன்றில் இருந்து கருகிய நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டது.

களுபோவில – பாத்திய மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இரவு உணவை பெறுவதற்காக அவர் காரில் நேற்றிரவு பயணித்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்