தேயிலை தொழிற்சாலை கூரையில் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளி கீழே வீழ்ந்து உயிரிழப்பு

by Staff Writer 10-03-2021 | 8:48 PM
Colombo (News 1st) ஹட்டன் - அபோஸ்லி தோட்ட தேயிலை தொழிற்சாலையின் கூரையில் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அபோஸ்லி தோட்டத் தொழிற்சாலையிலுள்ள உர களஞ்சியசாலையின் கூரையை திருத்திக் கொண்டிருந்த போதே இவர் கீழே வீழ்ந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார் மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதான தோட்டத்தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.