சர்வதேச காட்டா சுற்றுப் போட்டி: கொழும்பில் பரிசளிப்பு விழா

by Staff Writer 10-03-2021 | 8:52 PM
Colombo (News 1st) Shotokan Karate Academy International கலையகத்தின் ஏற்பாட்டில் இணையவழி சர்வதேச காட்டா சுற்றுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் இன்று கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டன. இணையவழி சர்வதேச காட்டா சுற்றுப் போட்டிகள் அண்மையில் நிறைவுற்றிருந்ததுடன், வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்றது. Shotokan Karate Academy International தலைமையகத்தின் பிரதம ஆசிரியர் சிகான். அன்ரோ டினேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக தைரியம் மிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் சர்வதேச விருதினை வென்ற சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கலந்து கொண்டிருந்தார். இந்த சர்வதேச சுற்றுப் போட்டியில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், இத்தாலி, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, சர்வதேச விருதினை வென்ற சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கும் நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது. நடப்பாண்டிற்குரிய தேசிய கராத்தே தெரிவுக்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அன்ரோ டி​னேஷ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.