நிறவெறி குற்றச்சாட்டு தொடர்பில் Buckingham அரண்மனை

இளவரசரின் நிறவெறி குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்தும் Buckingham அரண்மனை 

by Staff Writer 10-03-2021 | 10:24 AM
Colombo (News 1st) இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் ஆகியோரால் சுமத்தப்பட்ட நிறவெறிக் குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்துவதாக Buckingham அரண்மனை தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை மிகவும் தீவிரமான பிரச்சினையாக கருதி செயற்படவுள்ளதாகவும் அரண்மனை கூறியுள்ளது. முன்னைய நிகழ்வுகளை நினைவுகூருவது மாறுபட்டிருந்தாலும், அவை தனிப்பட்ட முறையில் அறிக்கையிடப்பட்டிருக்க வேண்டுமென அறிக்கை ஒன்றினூடாக அரண்மனை குறிப்பிட்டுள்ளது. குழந்தையினுடைய நிறம் எவ்வாறிருக்கும் என இளவரசர் ஹரியிடம் அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்ததாக, ஓப்ரா வின்பிரியுடனான நேர்காணலில் சீமாட்டி மேகன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அரண்மனை வௌியிட்டுள்ள அறிக்கையில் சீமாட்டி மேகன் மீது அரச குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அன்பு கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் ஆகியோர் வழங்கிய நேர்காணலையடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலையை தொடர்ந்து, அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலான அவசர கலந்துரையாடலொன்று நேற்று (09) நடைபெற்றிருந்தது. இந்தக் கலந்துரையாடலையடுத்து, இளவரசர் மற்றும் சீமாட்டி ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலான குறித்த அறிக்கையை Buckingham அரண்மனை வௌியிட்டிருந்தது. குழந்தையின் நிறம் தொடர்பில் பிரித்தானிய மகாராணியோ அவரது கணவர் இளவரசர் பிலிப்போ கேள்வியெழுப்பியிருக்கவில்லை என, இளவரசர் ஹரி குறித்த நேர்காணலில் தௌிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.