முன்னறிவித்தலின்றி சென்ற பொலிஸார்; வாக்குமூலம் வழங்க மறுத்த வேலன் சுவாமிகள் 

முன்னறிவித்தலின்றி சென்ற பொலிஸார்; வாக்குமூலம் வழங்க மறுத்த வேலன் சுவாமிகள் 

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2021 | 5:19 pm

Colombo (News 1st) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் தவத்திரு வேலன் சுவாமிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கிளிநொச்சி பொலிஸார் இன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும், முன்கூட்டியே அறிவிக்கப்படாமையால், இன்று வாக்குமூலம் வழங்க முடியாதென பொலிஸாருக்கு அறிவித்ததாக வேலன் சுவாமிகள் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் இவ்வாறு பல்வேறு மட்டங்களில் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாக வேலன் சுவாமிகள் கூறினார்.

சட்டத்தை தாம் மதிக்கும் அதேவேளை, வாக்குமூலம் போன்ற தொடர்ச்சியான உள ரீதியான பாதிப்புகள் ஏற்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்