கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து வல்சபுகல விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து வல்சபுகல விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து வல்சபுகல விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2021 | 2:00 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை – வல்சபுகல சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை நகரை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

வல்சபுகல விவசாயிகள் கடந்த 53 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த மூன்று நாட்களாக, விவசாயிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சத்தியாக்கிரக போராட்டம் தற்போது எதிர்ப்பு போராட்டமாக மாறியுள்ளது.

இன்று காலை சூரியவெவ நகரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்ட விவசாயிகள், தற்போது அம்பலாந்தோட்டை நகரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்