ஓல்டன் தோட்ட முகாமையாளரை தாக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான 22 பேருக்கு பிணை

ஓல்டன் தோட்ட முகாமையாளரை தாக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான 22 பேருக்கு பிணை

ஓல்டன் தோட்ட முகாமையாளரை தாக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான 22 பேருக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2021 | 6:25 pm

Colombo (News 1st) மஸ்கெலியா – சாமிமலை, ஓல்டன் தோட்ட முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் தாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 22 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, குறித்த 22 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்