1000 ரூபா வழங்க முடியாவிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்களை அரசிடம் கையளிக்கவும் – நிமல் சிறிபால டி சில்வா  

1000 ரூபா வழங்க முடியாவிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்களை அரசிடம் கையளிக்கவும் – நிமல் சிறிபால டி சில்வா  

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2021 | 3:36 pm

Colombo (News 1st) 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்க முடியாத பெருந்தோட்ட நிறுவனங்களை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு அந்த நிறுவனங்களுக்கு கூறியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் குறிப்பிட்டார்.

சிரச தொலைக்காட்சியில் இன்று ஔிபரப்பான பெத்திகட நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைக் கூறினார்.

இவ்வாரத்திற்குள் வர்த்தமானி வௌியிடப்படும் எனவும் மார்ச் மாதத்தில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கிடைக்கும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மற்றும் இறப்பர் விலை அதிகரித்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவது சிரமமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்