ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஹர்ஷன ராஜகருணா செல்ஃபி; சிறைக்காவலர் பணி நீக்கம் 

by Staff Writer 09-03-2021 | 7:52 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோது எடுத்துக்கொண்ட செல்ஃபி (selfie) தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட அனுமதித்த சிறைக்காவலர் இந்த விடயத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார். அதன் பிரகாரம், அவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். கைதி மீது  சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.