டிஜிட்டலில் வௌியாகும் உலகம் சுற்றும் வாலிபன்

புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வௌியாகவுள்ள உலகம் சுற்றும் வாலிபன்

by Bella Dalima 09-03-2021 | 4:11 PM
எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வௌியாக இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் திருப்பத்தின் போது வெளியான படம் உலகம் சுற்றும் வாலிபன். தி.மு.க -வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க-வை தொடங்கிய போது, அக்கட்சிக் கொடியுடன் படம் வௌியானது. இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத்துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை எவ்வாறு முறியடிக்கிறார் என்பது தான் கதை. முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர் ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாகக் கையாண்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கிறது.