by Staff Writer 09-03-2021 | 4:32 PM
Colombo (News 1st) பொய்யான முறைப்பாட்டை முன்வைத்தமை தொடர்பில் சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸூக்கு (Garnier Bannister Francis) எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, இலக்கம் 3 மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் என தெரிவித்து சிலர் தம்மை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் துப்பாக்கியைக் காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகை தொடர்பிலான வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கான தினத்தை எதிர்வரும் 04 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.