வீதிப் பாதுகாப்பு சர்வதேச கிரிக்கெட் தொடர்; இலங்கை லெஜன்ட்ஸ் அணி வெற்றி

வீதிப் பாதுகாப்பு சர்வதேச கிரிக்கெட் தொடர்; இலங்கை லெஜன்ட்ஸ் அணி வெற்றி

வீதிப் பாதுகாப்பு சர்வதேச கிரிக்கெட் தொடர்; இலங்கை லெஜன்ட்ஸ் அணி வெற்றி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Mar, 2021 | 10:15 am

Colombo (News 1st) வீதிப் பாதுகாப்பு சர்வதேச கிரிக்கெட் தொடரின் தென்னாபிரிக்கா லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணி, இந்தத் தொடரில் அடையும் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி இதுவாகும்.

இந்தியாவின் ராய்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணி 18.5 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணி சார்பில் Andrew Puttick அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றார்.

நுவன் குலசேகர, ரங்கன ஹேரத், சனத் ஜயசூரிய ஆகியோர் தலா 02 விக்கெட்களை வீழ்த்தினர்.

வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி சார்பாக அணித்தலைவர் திலகரட்ன டில்ஷான் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றார்.

சனத் ஜயசூரிய 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

உபுல் தரங்க 27 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை ரங்கன ஹேரத் வென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்