by Staff Writer 09-03-2021 | 11:10 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய முதலீட்டு திட்டம் குறித்து இலங்கை அரசாங்கம், அதானி நிறுவனத்துடன் நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.