தடுப்பூசிகளை தாமதமின்றி விநியோகிப்பதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு 

தடுப்பூசிகளை தாமதமின்றி விநியோகிப்பதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு 

தடுப்பூசிகளை தாமதமின்றி விநியோகிப்பதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2021 | 5:14 pm

Colombo (News 1st) முற்பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கு அமைய, ஒரு மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை எவ்வித தாமதமும் இன்றி இலங்கைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் சீரம் (Serum) நிறுவனம் அறிவித்துள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒக்ஸ்பர்ட் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசியை கொவிஷீல்ட் என்ற வர்த்தக நாமத்துடன் இந்தியாவின் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கின்றது.

குறித்த வகையான 5 இலட்சம் தடுப்பூசிகள் கடந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்