ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2021 | 10:05 pm

Colombo (News 1st) நாடொன்று பெண்களை நடத்தும் விதம் அதன் உண்மையான வளர்ச்சியின் சமூக குறிகாட்டியாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கை ஏனைய பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக, ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்போதும் பண அடிப்படையில் மதிப்பிடப்படாத போதிலும், தேசிய உற்பத்திக்கான பெண்களின் பங்களிப்பு அதிக பெறுமதியுடையது என்பதை உறுதியாக கூற முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார, சமூக மற்றும் கலாசார வாழ்க்கையின் பல துறைகளில் பெண்கள் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளதாகவும் இன்னும் பல துறைகளில் அவர்கள் ஆண்களுக்கு சவால் விடும் நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியானது பெண்ணின் அறிவாற்றல், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை போன்றே சமூகத்தின் சமூக நீதி மற்றும் முதிர்ச்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டு என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் துறையில் பெண்களின் பங்கேற்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்