மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அமைச்சு

மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு 

by Staff Writer 07-03-2021 | 3:21 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை திறப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இந்நாட்களில் இடம்பெற்று வருவதாக அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில ​பெரேரா தெரிவித்துள்ளார். 05, 11 மற்றும் 13 ஆம் தர வகுப்புகளை முதற்கட்டமாக ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.