போலி ஆவணம் தயாரிக்கும் நிலையமொன்று சுற்றிவளைப்பு 

ஹபரணையில் போலி ஆவணம் தயாரிக்கும் நிலையமொன்று சுற்றிவளைப்பு 

by Staff Writer 07-03-2021 | 4:11 PM
Colombo (News 1st) ஹபரணை நகரை அண்மித்த பகுதியில் நடத்திச்செல்லப்பட்ட போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது போலி ​தேசிய அடையாள அட்டை, வாகன இலக்கத்தகடு, வருமான வரிப்பத்திரம், காப்புறுதிச் சான்றிதழ், அரச இலச்சினை உள்ளிட்ட போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திவுலப்பிட்டிய, கஹட்டகஸ்திஹிலிய மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த இலக்கத்தகடற்ற காரை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். குறித்த நிலையத்தில் இருந்து போலி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்