மீண்டும் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த வல்சபுகல விவசாயிகள்

மீண்டும் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த வல்சபுகல விவசாயிகள்

மீண்டும் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த வல்சபுகல விவசாயிகள்

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2021 | 6:12 pm

Colombo (News 1st) முன்மொழியப்பட்ட காட்டு யானை மேலாண்மை இருப்பு வர்த்தமானியை அறிவிக்க கோரி ஹம்பாந்தோட்டை – வல்சபுகல விவசாயிகள் இன்று (07) மீண்டும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கையினை முன்வைத்து, வல்சபுகல விவசாயிகள் கடந்த 50 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

86 விவசாய அமைப்புகள் இந்த சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன் இன்று அவர்கள் இரண்டாவது தடவையாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், அமைச்சர் சமல் ராஜபக்ஸ குறித்த பகுதிக்கு விஜயம் செய்து வழங்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்