ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கிய பகுதிகளுக்கு பாப்பரசர் விஜயம்

ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கிய பகுதிகளுக்கு பாப்பரசர் விஜயம்

ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கிய பகுதிகளுக்கு பாப்பரசர் விஜயம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Mar, 2021 | 4:27 pm

Colombo (News 1st) முன்னர் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் வட பகுதிக்கு பரிசுத்த பாப்பரசர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஈராக் விஜயத்தின் மூன்றாம் நாளாகிய இன்று (07) இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

Mosul நகரைச் சென்றடைந்துள்ள பரிசுத்த பாப்பரசர், அங்கு போரினால் அழிவடைந்த தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் இர்பிலில் பரிசுத்த பாப்பரசரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இந்தத் திருப்பலியில் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்