வருமான வரி திணைக்களத்தினருக்கு COPA அழைப்பு

COPA-வில் முன்னிலையாகுமாறு வருமான வரி திணைக்களத்தினருக்கு அழைப்பு

by Staff Writer 06-03-2021 | 4:32 PM
Colombo (News 1st) வரி அறவிடுதலின் முன்னேற்றம் தொடர்பான விசாரணைக்காக வருமான வரித் திணைக்களத்தினர் COPA எனப்படும் அரசாங்கத்தின் கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி COPA குழுவில் முன்னிலையாகுமாறு வருமான வரித் திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரிய அளவில் வரியை செலுத்தாத நிறுவனங்கள் தொடர்பில் ஊடகங்களினூடாக பகிரங்கப்படுத்துமாறும், அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை இரண்டு மாதத்திற்குள் பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், கடந்த ஜனவரி 6 ஆம் திகதி COPA குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவினால் வருமான வரித் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, வரி அறிவிடுதல் தொடர்பில் வருமான வரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து COPA குழுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.