பதுளையில் பஸ் விபத்து: 12 பேர் காயம்

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்திற்குள்ளானது: 12 பேர் காயம்

by Staff Writer 06-03-2021 | 3:40 PM
Colombo (News 1st) பதுளை - எல்ல, அல்பே பகுதியில் பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக்கோளாரினால் இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ்ஸில் 23 பேர் இருந்துள்ளனர்.