கொரோனா தடுப்பூசிக்காக 1000 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது

கொரோனா தடுப்பூசிக்காக 1000 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது

கொரோனா தடுப்பூசிக்காக 1000 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2021 | 6:56 pm

Colombo (News 1st) கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு 1000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வுப்பிரிவிற்கு இன்று காலை கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 20,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

40 வயதான குறித்த சந்தேகநபர் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் என தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்