ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான புதிய உறுப்பினராக அம்பலம் கனகையா தெரிவு

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான புதிய உறுப்பினராக அம்பலம் கனகையா தெரிவு

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான புதிய உறுப்பினராக அம்பலம் கனகையா தெரிவு

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2021 | 5:30 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான புதிய உறுப்பினராக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பலம் கனகையா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய உறுப்பினர் தெரிவுக்கான அதிவிசேட வர்த்தமானி, ஊர்காவற்துறை பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலகர் இராஜேந்திரம் கிறிஸ்ரி அமல்ராஜினால் வௌியிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேச சபையின் நாராந்தனை வடக்கு வட்டார உறுப்பினரான கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தமையால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கான புதிய உறுப்பினரை பரிந்துரைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரால் அம்பலம் கனகையாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளரின் பரிந்துரைக்கு அமைய, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் நாராந்தனை வடக்கு வட்டாரத்திற்கான புதிய உறுப்பினராக அம்பலம் கனகையாவின் பெயர் குறிப்பிடப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்