English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Mar, 2021 | 8:25 pm
Colombo (News 1st) மேற்கு முனையம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வரும் பின்புலத்தில், இலங்கையில் LNG எனப்படும் இயற்கை திரவ வாயு கட்டமைப்பிற்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்காக இந்திய நிறுவனமொன்று மேற்கொண்ட சாத்திய ஆய்வு தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக இந்த சுற்றாடல் ஆய்வறிக்கையினை மேற்கொள்ளும் பணி PwC India எனும் கணக்காய்வு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இந்த நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆலோசகர்களுக்கு உரிய தகுதி இல்லை என இன்றைய பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், குறித்த நிறுவனம் LNG அல்லது மிதக்கும் களஞ்சியசாலை தயாரிக்கும் ஆலோசனை செயற்பாடுகளில் ஈடுபட்ட நிறுவனமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, PwC India நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முறைகேட்டை கண்டுபிடிக்காத காரணத்தால், இரண்டாண்டுகள் கடக்கும் வரை அந்நாட்டிலுள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் கணக்காய்வில் ஈடுபடுவதை இடைநிறுத்த இந்திய பிணையங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்ததாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.
கணக்காய்வின் போது குறித்த நிறுவனத்தின் கவனயீனத்தால் இந்தியாவில் முக்கிய கூட்டுத்தாபனங்கள் வரலாற்றில் மிக மோசமான நிதி மோசடியை எதிர்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
21 Jan, 2022 | 03:53 PM
27 Sep, 2019 | 08:46 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS