ஓட்டமாவடியில் ஜனாசாக்கள் நல்லடக்கம்

ஓட்டமாவடியில் ஜனாசாக்கள் நல்லடக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Mar, 2021 | 6:15 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணிகள் மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இன்று ஆரம்பமாகின.

மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சூடுபத்தினச்சேனையில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஓட்டமாவடி, சூடுபத்தினச்சேனையில் இரண்டு ஜனாஸாக்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டதாக கொவிட் பரவலைத் தடுக்கும் செலயணியின் தலைவர், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மேலும் 5 ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ​மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்