உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் இலங்கைக்கு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் இலங்கைக்கு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் இலங்கைக்கு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Mar, 2021 | 6:25 pm

Colombo (News 1st) COVAX திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படவுள்ள அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை மறுதினம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இதற்கமைய, 1.44 மில்லியன் தடுப்பூசிகளில் 264, 000 தடுப்பூசிகள் நாளை மறுதினம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் முதலாவது தொகுதி, கொவிட் அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படவுள்ளது.

எஞ்சிய தடுப்பூசிகள், எதிர்வரும் மே மாத இறுதி வரை பல்வேறு கட்டங்களின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்