Sputnik V தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி

Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி 

by Staff Writer 04-03-2021 | 2:05 PM
Colombo (News 1st) ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவை கருதி பயன்படுத்த, தேசிய ஔதடங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனம் இதற்கான அனுமதியை கோரியிருந்தது. 3 இலட்சம் Sputnik V தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவெல தெரிவித்துள்ளார்.