MIM இன் முதலாவது தமிழ் மொழி மூல கற்கைநெறி இன்று அங்குரார்ப்பணம்

by Staff Writer 04-03-2021 | 7:57 PM
Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா குழுமத்தின் MIM எனப்படும் Maharaja Institute of Management இன் முதலாவது தமிழ் மொழி மூல கற்கைநெறி இன்று (04) அங்குரார்ப்பனம் செய்யப்பட்டது. தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பு தொடர்பான தமிழ் மொழி மூல சான்றிதழ் கற்கைநெறி வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. கெபிட்டல் மகாராஜா குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சுனில் கனோஜியா, இலத்தரனியில் ஊடகப்பிரவு குழுமப் பணிப்பாளர் நீட்ரா வீரசிங்க, மனித வளம் மற்றும் சட்டப்பிரிவு குழுமப் பணிப்பாளர் சுரங்க ஜயலத், குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், நிறைவேற்று தரமல்லாத பணிப்பாளர் இராஜேந்திர தியாகராஜா உள்ளிட்ட மேலும் பலர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பு தொடர்பான தமிழ் மொழி மூல சான்றிதழ் கற்கைநெறிக்கு 70 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் இந்த கற்கைநெறியை தொடரவுள்ளமை சிறப்பம்சமாகும். கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த மாணவர்களில் ஒரு பகுதியினர் அங்குரார்ப்பண நிகழ்வில் நேரடியாகவும் ஏனைய மாணவர்கள் இணையவழியாகவும் இணைந்து கொண்டிருந்தனர்.