இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் ஒருவர் கைது

by Staff Writer 04-03-2021 | 3:43 PM
Colombo (News 1st) இருபதாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற மஹரகம பொலிஸ் நிலைய சார்ஜன் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். மஹரகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜை ஒருவர் மற்றும் கெப் வண்டியை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெற்றப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய குறிப்பிட்டார். மஹரகம நகரில் வைத்து இலஞ்சம் பெற்ற போதே பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று (04) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.