மேலதிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்

மேலதிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்

மேலதிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2021 | 3:05 pm

Colombo (News 1st) மின்சாரத்திற்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்காக, மேலதிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக, குறித்த யோசனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜனயவர்தன குறிப்பிட்டார்.

இதன் கீழ் 128 மெகா வாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர், பேராசிரியர் ஜனக ரத்னாயக்கவிடம் வினவியமைக்கு, குறித்த யோசனை ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிலவும் வறட்சியுடனான வானிலையை கவனத்திற் கொண்டு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, அடுத்த வாரத்தில் ஆணைக்குழு கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்