ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம் 

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம் 

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2021 | 6:01 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான தெரிவுக் குழு இன்று (04) முற்பகல் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் 3 நாட்கள் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்குரிய யோசனையை எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதலாவது நாளுக்குரிய ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தை நடத்துவதற்குரிய ஏனைய இரண்டு நாட்களையும் அடுத்த பாராளுமன்ற வாரத்தில் முன்னெடுப்பதற்கும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்