அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2021 | 4:19 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் Capitol கட்டட தொகுதியைத் தாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத ஆயுதக் குழுவொன்று இன்றைய தினம் Capitol தொகுதியில் தாக்குதல் நடத்தக்கூடுமென புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகள் மார்ச் 4 ஆம் திகதி அன்று Capitol கட்டடத்திற்குச் சென்று அங்குரார்ப்பணம் செய்து வைப்பது வழமையாகும்.

இந்த நிகழ்வை முன்னிட்டே தாக்குதல்கள் நடத்தப்படக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரதிநிதிகள் சபையின் இன்றைய நாளுக்குரிய அமர்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் செனட் அதன் வழமையான நேர அட்டவணைக்கமைய அமர்வை நடத்தவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்