போதைப்பொருள் பாவிப்போரை இனங்காணும் வேலைத்திட்டம் 

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளங்காண புதிய வேலைத்திட்டம் 

by Staff Writer 03-03-2021 | 10:36 AM
Colombo (News 1st) போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தீர்மானித்துள்ளது. கனரக வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் பஸ் சாரதிகள் போதைப்பொருளை பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர், வைத்தியர் ஷவிந்திர கமகே தெரிவித்துள்ளார். இதனால், பாதசாரிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். போதைப்பொருளை பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கு, சிறப்பு உபகரணங்கள் மற்றும் அத்தகைய சாரதிகளுக்கு எதிராக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் குறிப்பிட்டார். எதிர்வரும் சில மாதங்களுக்குள் புதிய நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வைத்தியர் ஷவிந்திர கமகே மேலும் தெரிவித்தார்.