அரசியல் கட்சிகள் பதிவிற்கு 35 விண்ணப்பங்கள்

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வற்கு 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

by Staff Writer 03-03-2021 | 12:06 PM
Colombo (News 1st) புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் குழுவிற்கு அனுப்பப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளனர். புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் நேற்றுடன் (02) முடிவடைந்தன.